விஜய்யின் அ.தி.மு.க., பா.ஜ.க. எதிர்ப்பு பேச்சுக்கு முக்கிய காரணம் அவரது காங்கிரஸ் நண்பர்கள். குறிப்பாக பிரவீன் சக்ரவர்த்தி விஜய்க்கு ஒரு முக்கிய வாக்குறுதியை அளித்திருந்தார். காங்கிரஸ் எந்த நேரமும் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வந்துவிடும். காங்கிரசும், த.வெ.க.வும் சம எண்ணிக்கையில் தொகுதிகளை பிரித்துக்கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்பதுதான் பிரவீன் சக்ரவர்த்தி, விஜய்க்கு கொடுத்த பார்முலா. எவ்வளவு தொகுதிகள் வேண்டுமானாலும் கேளுங்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி என நான் அறிவிக்கிறேன். கேரளா, தமிழகம், புதுவை மூன்றிலும் காங்கிரசின் ஆட்சி அமையும். அஸ்ஸாம், மேற்கு வங்கம் தவிர தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் ஆட்சி அமைவது காங்கிரசை மறுபடியும் ‘லைம்லைட்டுக்கு கொண்டுவரும். அதற்கான வியூகங்களை நமது வியூக அமைப்பாளர்கள் சுனிலும், ஜான் ஆரோக்கியமும் இணைந்து அமைத்துத் தருவார்கள் என சொல்லியிருக்கிறார்'’என்றனர் த.வெ.க.வினர்.
"தமிழகத்தில் எம்.ஜி.ஆரை விட எனக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. என்னை நீங்கள் காங்கிரசுக்காக பயன்படுத்திக்கொள்ளுங் கள். பா.ஜ.க. எனக்கு பல வழிகளில் அழுத்தம் கொடுத்துவருகிறது. கரூர் வழக்கில் என்னை குற்றவாளியாக்குவோம் என மிரட்டுகிறார்கள். "ஜனநாயகன்' படத்தை ரிலீஸ் செய்யாமல் தடை விதித்துவிட் டார்கள். 35-40 சீட்டுகள், துணை முதல்வர் பதவி என விஜயகாந்த் பார்முலாவை காண்பித்து என்னை ஏமாற்றுகிறார்கள். அவர்களது பார்முலாவுக்கு நான் ஒத்துக்கொண்டால், கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கொடுக்கப்போகும் ரிப்போர்ட்டில் எனது பெயர் இருக்காது.. அப்படியில்லையென்றால் கரூரில் 41 பேர் மரணத்திற்கு நான்தான் காரணம் என ரிப்போர்ட் கொடுப்பார்கள். "ஜனநாயகன்' வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அதில் எனக்கு எதிராக நகர்வுகளை மேற்கொள்வார்கள். அதுதவிர எனக்கெதிராக போடப்பட்டிருக்கும் இன்கம் டாக்ஸ் வழக்கு, ஜான் ஆரோக் கியம் மற்றும் ஆதவ்அர்ஜுனா மீது என்.ஐ.ஏ. வழக்கு என மிரட் டல்கள் நாளுக்குநாள் அதி கரித்துக்கொண்டே வருகிறது. தினம் ஒரு தூதுவராக எங்களிடம் வந்து பேசுகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் செலவுகளை பார்த்துக் கொள்வதாக கூறுகிறார். உண்மையில் தேர்தல் செலவு களுக்கு என்னிடம் பணமில்லை. தனிப்பட்ட என்னுடைய அரசியல் செலவுகளை ஆதவ் அர்ஜுனாதான் பார்த்துக்கொள் கிறார். தேர்தலுக்கு நான் நிதி திரட்ட வேண்டும். அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணிக்குச் சென்றால் இவையெல்லாம் எனக்கு எளிதில் நடந்துவிடும். ஆனால் நான் காங்கிரசை எதிர்பார்க்கிறேன். காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் தி.மு.க. வலுவான கூட்டணி என்கிற பிம்பம் உடையும். எதிர்காலத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் எல்லாம் என் பின்னே அணிவகுக்கும் என்று விஜய், பிரவீன் சக்ரவர்த்தியிடம் பேசியுள்ளார்.
வழக்கமாக யார் பேசி னாலும் அதை டேப் செய்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட பிரவீன், விஜய்யின் இந்த மனம் திறந்த பேச்சையும் டேப் செய்தார். அதை எடுத்துக்கொண்டு ராகுல்காந்தியை சந்தித்தார். அதைக்கேட்ட ராகுல், “"உனக்கு யார் விஜய்யுடன் கூட்டணி பற்றிப் பேச சுதந்திரம் அளித்தது? தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறது. அந்தக் கூட்டணி தொடருகிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதெல்லாம் தேர்தல் முடிவுகள் வந்தபிறகு பேசவேண்டிய விசயங்கள். அதையெல்லாம் இப்பொழுது, அதுவும்
விஜய்யுடன் பேசுவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கேரளாவிலும் புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சி விஜய்யை நம்பியா வளர்ந்தது? எனது தந்தை ராஜீவ் தன்னுடைய உயிரையே தியாகம் செய்த மண் தமிழ்நாடு. அங்கு காங்கிரசுக்கு என தனி மரியாதை இருக்கின்றது. கேரளாவில் யார் தடுத்தாலும் நாம் ஆட்சிக்கு வருவது உறுதி என உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
விஜய், பா.ஜ.க. கூட்டணிக்கு தேர்தல் முடிந்தபிறகு ஆதரவு தர மாட்டார் என உன்னால் உறுதியாக கூறமுடியுமா? நீ மிகப்பெரிய காங்கிரஸ் கட்சியை விஜய்க்காக அடகு வைக்கிறாய். உன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தீர்மானம் போட்டு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த வேலையை செய்ய வைத்துவிடாதே'’என ராகுல், பிரவீன் சக்ரவர்த்திக்கு கடுமையாக டோஸ் விட்டு எச்சரிக்கை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் "நான் ராகுலிடம் பேசிவிட்டேன்' என்று மெசேஜ் ஒன்றை விஜய்க்கு அனுப்பியுள்ளார் பிரவீன். அத்துடன் ‘"விசில் ஊதப்பட்டது, தேர்தல் தொடங்கி விட்டது'’ என சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
இதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்ட விஜய், அ.தி.மு.க.வை பா.ஜ.க. அடிமை என்றும், ஊழல் கட்சி என்றும் முதல்முறையாக மாமல்லபுரம் கூட்டத்தில் பேசினார். பிளாக்கில் டிக்கெட் விற்று ஊழல் செய்தவர் என அ.தி.மு.க.வினர் விஜய்யை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஓ.பி.எஸ்., ராமதாஸ் ஆகிய இருவரும் விஜய்யிடம் பேசிவருகிறார்கள். தே.மு.தி.க. விஜய் பக்கம் அதிகம் பேசாமல், தி.மு.க. பக்கம் சாய்வதற்காக பேசிக்கொண்டிருக்கிறது.
“விஜய்க்கும் பிரவீன் சக்ரவர்த்திக்குமிடையேயான தொடர்புகளை ஒரு ஜோசியர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரை காரில் ஏற்றிக்கொண்டுதான் விஜய் மாமல்லபுரம் வந்தார். ஒருபக்கம் விஜய், மோடி விழாவில் பங்கேற்பார் என அ.தி.மு.க.வினர் புரூடா விட்டுக் கொண்டிருந்தனர். மறுபக்கம் அவர் காங்கிரசுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
"மொத்தத்தில் விஜய் மிகப்பெரிய குழப்பம் மற்றும் ஏமாற்றத்துடன் இருக்கிறார்'” என்கிறார்கள் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/vijay-2026-01-27-10-54-09.jpg)